காசாவில் குழந்தைகளை இஸ்ரேல் குறி வைப்பதாக ஐக்கிய நாடுகள் ஆணையம் குற்றம்சாட்டு
23 ஆனி 2026 செவ்வாய் 16:30 | பார்வைகள் : 1158
காசாவில் குழந்தைகளை இஸ்ரேல் குறி வைப்பதாக ஐக்கிய நாடுகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் காசாவில் உள்ள குழந்தைகளை திட்டமிட்டு குறி வைப்பதாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்ரேலிய படையினர் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இணையான செயல்களில் ஈடுபடுவதாக சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
குடும்பங்களுடன் வெளியேற முயன்ற மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு சென்ற குழந்தைகளை கூட இஸ்ரேலிய படைகள் திட்டமிட்டு தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் காசா போரில் இதுவரை 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட 44,143 குழந்தைகள் காயமடைந்து இருப்பதாகவும் ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையானது மிக குறைவு என்றும், உண்மையான எண்ணிக்கை இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஆகியவற்றை தவிர்த்து, காசாவில் உள்ள குழந்தைகளுக்கு செய்யப்படும் பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள் மற்றும் மனிதாபிமானமற்ற தரக்குறைவான நடத்தைகள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
ஆனால் ஐ.நாவின் இத்தகைய அறிக்கைகளை இஸ்ரேல் அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire