ஸ்பெயினின் இரண்டாவது உயரமான கட்டிடத்தில் தீவிபத்து
24 ஆனி 2026 புதன் 12:42 | பார்வைகள் : 1265
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரின் நிதி மாவட்டத்தில் அமைந்துள்ள டோர்ரே மோவே (Torre Moeve) எனப்படும் 49 மாடி வானளாவிய கட்டிடத்தில் செவ்வாயக்கிழமை (ஜூன் 23) மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தீ முதலில் 23 மற்றும் 25வது மாடிகளுக்கிடையிலான தொழில்நுட்ப அறையில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடத்தில் புகை பரவியதால், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சிலர் 34 மாடிகள் படிக்கட்டிலேயே இறங்கியதாக கூறினர்.
அவசர சேவை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். மாட்ரிட் பொலிஸார் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நிலைமையை கண்காணித்தனர்.
சமுர்-ப்ரொடெக்சியோன் சிவில் குழுவினர், புகை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், ஒருவருக்கு பதட்டம் காரணமாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
சம்பவம் நடந்த டோர்ரே மோவே கட்டிடம், புகழ்பெற்ற நார்மன் ஃபோஸ்டர் வடிவமைத்த Cuatro Torres வளாகத்தின் ஒரு பகுதியாகும். இது மாட்ரிட் நகரின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகும்.
2025 டிசம்பரில் இதே கட்டிடத்தில் மின்சார கோளாறு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இப்போது மீண்டும் தீ ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள், தீயை முழுமையாக கட்டுப்படுத்தியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire