Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணையில் இன்னும் சிக்கியுள்ள 26 பிரெஞ்சு மாலுமிகள்!!

ஹோர்முஸ் நீரிணையில் இன்னும் சிக்கியுள்ள 26 பிரெஞ்சு மாலுமிகள்!!

24 ஆனி 2026 புதன் 15:52 | பார்வைகள் : 2046


மத்திய கிழக்கு ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள நான்கு பிரெஞ்சு கப்பல்களில் 26 பிரெஞ்சு மாலுமிகள் இன்னும் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக, பிரான்சின் வணிகக் கடற்படை அதிகாரிகள் சங்கமான (CGT) தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பு, வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வெளியேற்றத்தின் நடைமுறை இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படவில்லை.

தற்போது, கப்பல்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே இருப்பதால், கப்பல்களின் பாதுகாப்பான இயக்கத்திற்காக அவர்கள் கப்பலை விட்டு வெளியேற முடியாது. மாலுமிகளும் கப்பல்களும் ஒன்றாக பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதே சங்கத்தின் கோரிக்கையாகும்.

மேலும், பொதுமக்கள் மாலுமிகளை போர்ப் பகுதிகளில் வணிகப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்கும் மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டும் என்றும் CGT வலியுறுத்தியுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3