அப்பாவைக் காணோம் என கேலியாக முதல்வர் பேசியது தவறு; மார்க்சிஸ்ட் சண்முகம்
25 ஆனி 2026 வியாழன் 12:19 | பார்வைகள் : 815
அப்பாவைக் காணோம் என்று கேலியாக முதல்வர் பேசியது மிகவும் தவறு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, அப்பாவைக் காணோம் என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது மிகவும் தவறானது.
இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் கணவனைத் தேடும் மனைவி என்று பேசியதும் தவறுதான்.
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதை உணர்ந்து இரு தரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சண்முகம் குறிப்பிட்டு உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire