முதல் முறையாக ஜெலன்ஸ்கியை பாராட்டிய ட்ரம்ப்
25 ஆனி 2026 வியாழன் 07:55 | பார்வைகள் : 1763
உக்ரைன்-ரஷ்யா போரில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்க ஜபாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதியிடம் வெற்றி பெறுவதற்கான எந்த சாதகமான சூழலும் இல்லை என்று முன்பு கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி, ஜெலன்ஸ்கி குறைந்தது தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தற்போது கூறியுள்ளார்.
இரு தரப்பிலும் பலர் கொல்லப்படுகிறார்கள், ஆனால் ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
போர்க்களத்தில் உக்ரைன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக வல்லுநர்கள் தரப்பு கூறுகின்றனர்; இருப்பினும், அந்நாட்டின் நகரங்கள் இன்னும் ரஷ்யாவின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.
பிரான்சில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பும் ஜெலென்ஸ்கியும் மிக அண்மையில் சந்தித்தனர்; அப்போது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்கத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில், பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி மற்றும் போலந்து நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பை முன்னெடுத்துள்ள ஜேர்மனியின் சேன்சலர், ஜூலை மாதம் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவான வலுவான ஒரு திட்டத்தை வெளிப்படுத்த ஐரோப்பிய நட்பு நாடுகள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் ஐரோப்பியத் தலைவர்கள் காணொளி வாயிலாகப் பேசியதைத் தொடர்ந்து, பெர்லினில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபிரெட்ரிக் மெர்ஸ், உக்ரைன் தொடர்ந்து வலிமையுடன் உள்ளது என்பதே ரஷ்யாவுக்கு விடுக்கப்படும் செய்தி என்றார்.
மேலும், ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகளாகிய நாம், உக்ரைனுக்கு வலுவான நிதி உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என ஜேர்மானிய அரசாங்கம் முன்மொழிவதாகவும், ஐரோப்பாவின் ஆதரவு நீடிக்கிறது என்றும் மெர்ஸ் கூறியுள்ளார்.
ட்ரம்ப் உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவர்கள், துருக்கியின் தலைநகரில் ஜூலை 7-8 திகதிகளில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire