வரலாறு காணாத வெப்பம் – 72 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
25 ஆனி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 3384
நாடு முழுவதும் கடும் வெப்பஅலை தொடர்ந்து தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இன்று ஜுன் மாதம் 25ம் திகதி வியாழக்கிழமை நாட்டின் 72 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பகுதியைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் நீடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Paris நகரில் இன்று அதிகாலை 6 மணிக்கே 28.9 பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் வெப்பநிலை 30 பாகைக்கு கீழ் குறையாத நிலையில், அதிகாலை 4.50 மணியளவில் மட்டுமே சற்று தணிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Nantes நகரில் 27.6 பாகையும், Bordeaux மற்றும் Bourges நகரங்களில் 29 பாகையும் பதிவாகியுள்ளன. Toulouse மற்றும் La Rochelle பகுதிகளிலும் 26 பாகை வெப்பநிலை நிலவுகிறது.
இதனிடையே, கடும் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் அபாயம் காரணமாக மேலும் 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Côtes-d'Armor, Ille-et-Vilaine, Manche உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் எச்சரிக்கை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில பகுதிகளில் மழை பெய்யும் அபாயமும் உள்ளதாக Météo-France எச்சரித்துள்ளது.
இதனிடையே நேற்று புதன்கிழமை Paris நகரில் 40.3 பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக Météo-France தெரிவித்துள்ளது.கடந்த 150 ஆண்டுகால வானிலை பதிவுகளில் Paris நகரில் 40 பாகையை கடந்தது இது நான்காவது முறையாகும். இந்த ஆண்டில் முதல் முறையாக இவ்வளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதேவேளை Vendée பகுதியில் உள்ள Palluau மற்றும் தென்மேற்கு பிராந்தியமான Pissos ஆகிய நகரங்களில் 43.8 பாகை என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire