மத்திய அமைச்சர் மகன் குறித்து அவதூறு பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ராகுல்
26 ஆனி 2026 வெள்ளி 14:35 | பார்வைகள் : 797
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மகன் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜஹூபா என்ற இடத்தில், கடந்த 2018 ம் ஆண்டு, நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல், பேசும்போது அப்போதைய மபி முதல்வரும், மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு உள்ளது என குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ராகுல் மீது , போபாலில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திகேய சிங் சவுகான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து அவர் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், கார்த்திகேய சிங்கை குறிப்பிடும் வகையில் பேசவில்லை எனவும்,தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire