வெப்பஅலை தீவிரம்: மருத்துவமனைகளில் அவசரநிலை எச்சரிக்கை!!
26 ஆனி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 3271
கடும் வெப்பஅலை காரணமாக நாட்டின் மருத்துவமனைகள் எதிர்வரும் வார இறுதியில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் Stéphanie Rist தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அவசர உதவி சேவையான “SAMU”விற்கு வரும் அழைப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறினார்.
“ஒரு நாள் வெப்பம் அதிகரிப்பதாலேயல்ல, தொடர்ச்சியாக பல நாட்கள் கடும் வெப்பம் நிலவுவதால் மனித உடல்கள் பாதிக்கப்படுகின்றன” என அமைச்சர் விளக்கமளித்தார். கடந்த 24 மணிநேரத்தில் வெப்பத்துடன் தொடர்புடைய நோயாளிகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மருத்துவ உதவி கோரும் அழைப்புகளும் அதே அளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பரிஸில் மட்டும் 24 மணிநேரத்தில் 25 மாரடைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அவசர நிலையை முன்னிட்டு, விசேட சுகாதார அவசரநிலை மேலாண்மை திட்டமான “Orsan” திட்டத்தின் 3ஆம் நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகள், அவசர சேவைகள் மற்றும் தொடர்புடைய சுகாதார அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு, அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக வெப்பத்தால் முதியவர்கள், குழந்தைகள், நீண்டநாள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், குளிர்ச்சியான இடங்களில் தங்கவும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்பஅலை தொடரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர ஊர்திச் சேவைகள் மீது அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire