ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!
26 ஆனி 2026 வெள்ளி 07:44 | பார்வைகள் : 1163
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் அரச ஊழியர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, நீதிபதிகள் உட்பட இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் கடந்த 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் தொலைபேசிகள் கைப்பற்றப்படும் அழிக்கப்படும் எனவும், அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தலிபான் அரசு எச்சரித்துள்ளது.
இத்தடை உத்தரவு காரணமாக தங்களது அன்றாட அரசப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பெரும்பாலான அலுவலகக் கடமைகள், தகவல்கள் மற்றும் ஆவணப் பரிமாற்றங்கள் ஸ்மார்ட்போன்கள், வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர், தனது மாகாணத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் இந்தத் தடையை உடனடியாக அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் கல்வி கற்பதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கும் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளுக்கும் ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய கருவியாக விளங்கி வந்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, தலிபான் அரச பெண்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீது தொடர்ச்சியாக இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire