Insee மீது சைபர் தாக்குதல்: 12,800 பேர் பாதிப்பு!!
26 ஆனி 2026 வெள்ளி 21:30 | பார்வைகள் : 2091
பிரான்சின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் (Insee) ஜூன் 19 அன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் காரணமாக தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் உட்பட 12,800 பேரின் பெயர் மற்றும் அலுவலகத் தொடர்பு விவரங்கள் வெளியானதாக ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்டது. எனினும், கடவுச்சொற்கள், வங்கித் தகவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்கள் போன்ற முக்கியமான தகவல்கள் பாதிக்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தொடங்கப்பட்ட விசாரணையில், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து Insee சேகரித்த தரவுகள் எதுவும் கசியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், Insee அதிகாரிகள் பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு பதிவு சேவைக்காகவும் Insee ஒருபோதும் பணம், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது கடவுச்சொற்களை கேட்காது என்றும் நினைவூட்டியுள்ளது. இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பிரான்சின் பல அரசுச் சேவைகளும் இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. Jeveuxaider.gouv.fr தளத்தில் சுமார் 5.5 லட்சம் கணக்குகள் பாதிக்கப்பட்டதுடன், அரசு ஊழியர்களின் Tchap தகவல் தொடர்பு அமைப்பும் தாக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire