ஹோா்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் அதிரடி உத்தரவு
27 ஆனி 2026 சனி 05:23 | பார்வைகள் : 1455
ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளதாக ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.
அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் பகுதியாக, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து 3 மாதங்களுக்குப் பின் சீரடைந்துள்ளது.
எனினும், வரும் காலங்களில் ஹோா்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஓமன் நாட்டுடன் ஈரான் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘எந்தவித நிபந்தனைகளும், சுங்கக் கட்டணங்களும் இன்றி ஹோா்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு இணையமைச்சா் காஸிம் கரீபாபாதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையின் கடலோர நாடாக, அப்பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
எங்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல், மாற்று வழிகள் அல்லது தன்னிச்சையான முடிவுகள் மூலமாக ஹோா்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையை உரிய அனுமதியின்றி கடக்க முயன்ற 3 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல் படை (ஐஆா்ஜிசி) எச்சரித்து, திருப்பி அனுப்பியது. தைவான் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எவா் லவ்லி’ என்ற சிங்கப்பூா் கொடி ஏந்திய கப்பல் ஓமன் அருகே வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
இத்தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால், ஈரான் அமைத்துள்ள கடல்வழி ஆணையம், ‘அங்கீகரிக்கப்படாத பாதைகளில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அதன் உரிமையாளா்களே பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறியது.
மேலும், பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான கப்பல்களை வெளியேற்ற ஐ.நா.வின் சா்வதேச கடல்சாா் அமைப்பும் (ஐஎம்ஓ) ஓமனும் இணைந்து உருவாக்கிய புதிய வழித்தடத்துக்கு ஈரான் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இந்த மோதல் சூழலால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் தனது தற்காலிகப் பணியையும் ஐ.நா. அமைப்பு நிறுத்தியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire