உலகக் கோப்பை 2026: நோர்வேயை வீழ்த்திய பிரெஞ்சு அணி!!
27 ஆனி 2026 சனி 07:30 | பார்வைகள் : 2743
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குழு சுற்றுப் போட்டியில் பிரெஞ்சு அணி அபார வெற்றியை பதிவு செய்து தனது குழுவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. நோர்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஓஸ்மான் டெம்பிலே (Ousmane Dembélé) அதிரடியான 3 கோல்கள் அடித்து 4-1 என்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். மேலதிக நேரத்தில் Désiré Doué தனது முதல் உலகக்கோப்பை கோலை பதிவு செய்து அணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தினார்.
போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய பிரெஞ்சு அணி முதல் 20 நிமிடங்களுக்குள் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. எனினும் இரண்டாம் பாதியில் நோர்வே அணி கடுமையாக பதிலடி கொடுத்தது. குறிப்பாக Jörgen Strand Larsen எடுத்த பெனால்டியை பிரெஞ்சு கோல் கீப்பர் Mike Maignan அபாரமாக தடுத்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பிரெஞ்சு அணி தனது முன்னிலையை பாதுகாத்துக் கொண்டது.
இந்த சாதனையின் மூலம் ஓஸ்மான் டெம்பிலே, Just Fontaine மற்றும் Kylian Mbappé ஆகியோருடன் உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரெஞ்சு வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். போட்டிக்குப் பின்னர் பேசிய டெம்பிலே, “அணியின் ஒற்றுமையும் வீரர்களின் புரிந்துணர்வும் எங்களை வெற்றியடையச் செய்கிறது. இதே ஆற்றலை தொடர்ந்து காக்க வேண்டும்” என தெரிவித்தார். அடுத்த சுற்றில் பிரெஞ்சு அணி ஸ்வீடனை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire