தமிழகத்தில் ஆறு மாதத்தில் தேர்தல் வரும்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கணிப்பு
29 ஆனி 2026 திங்கள் 12:42 | பார்வைகள் : 1205
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்; தி.மு.க.,வினர் தயாராக இருக்க வேண்டும்'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை வானகரத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழா, ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஒரு மாதத்திலேயே தமிழகம் அதல பாதாளத்தை நோக்கி செல்லக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.
தொழில் நிறுவனங்கள், புதிய ஆட்சியை நம்பி தமிழகத்துக்கு வர பயப்படுகின்றன; அதனால், வேறு மாநிலங்களில் தொழில் தொடங்க செல்கின்றன.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்துள்ளது; ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் என, பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், எதை பற்றியும் கவலை இல்லாமல், திசை திருப்பும் வகையில் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. தமிழகத்திற்கு விரைவில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்; ஒரு மாதம் அல்லது ஆறு மாதம் கழித்து வரலாம். ஏனெனில், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. தி.மு.க., வெற்றி பெற, ஓட்டு போட்ட கட்சிகளின் ஆதரவுடன் தான், இந்த ஆட்சி வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. \u003cbr\u003e\u003cbr\u003eஓடும் வண்டி எப்போது நிற்கும் என தெரியவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும், 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விரக்தியில் விம்முகிறார்: த.வெ.க., பதிலடி
இனி, ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., நூறு சதவீதம் துடைத்தெறியப்படும்' என, தமிழக வெற்றிக் கழகத்தின் ஐ.டி., அணி தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில், எப்போது வேண்டுமானாலும், தேர்தல் வரலாம். மூன்று ஆண்டுகளில் வரலாம், ஆறு மாதத்தில் கூட வரலாம் என, பொறாமையும், விரக்தியும் பொங்க, ஸ்டாலின் பேசுகிறார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருப்பதை மறந்துவிட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை, அவமதிக்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார்; வெடிக்கிறார். இனி வரும், ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., 100 சதவீதம், துடைத்தெறியப்பட போவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire