வார இறுதியில் மீண்டும் கடும் வெப்பம்!!
29 ஆனி 2026 திங்கள் 17:22 | பார்வைகள் : 3682
சமீபத்தில் வரலாறு காணாத வெப்ப அலையிலிருந்து மீண்டுள்ள நிலையில், இந்த வார இறுதியிலிருந்து மீண்டும் கடும் வெப்பம் திரும்பும் என வானிலை ஆய்வு மையமான Météo-France தெரிவித்துள்ளது. வடக்கு பகுதிகளில் 28–30°C வரைவும், தெற்கு பகுதிகளில் அதைவிட அதிக வெப்பநிலையும் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 6 முதல் 13 வரை நாடு முழுவதும் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த முறை கடந்த வாரத்தைப் போல 40°C-ஐத் தாண்டும் அளவுக்கு வெப்பம் அதிகரிக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
தற்போதைய கணிப்புகளின்படி, பரிஸில் சுமார் 33°C மற்றும் போர்தோவில் 38°C வரை வெப்பநிலை உயரக்கூடும். ஆனால், வானிலை மாதிரிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் இந்த கணிப்புகளில் மாற்றம் ஏற்படலாம். தெற்கு பிரான்சில் மீண்டும் செம்மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறிப்பிடத்தக்க மழை பெய்யும் அறிகுறிகள் இல்லை. இதனால் ஏற்கனவே கடுமையாக உள்ள மண் வறட்சி மேலும் மோசமடைந்து, விவசாயம் மற்றும் நீர்வளங்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire