மேற்காசியாவில் அமைதி, தடையற்ற கப்பல் போக்குவரத்து: ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 ஆடி 2026 புதன் 07:25 | பார்வைகள் : 1044
மேற்காசியாவில் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு ஏற்படுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் தடையின்றி கப்பல் போக்குவரத்து தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கத்தாரில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்காசியா பிரச்னையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஈரான் அதிபர், பிரதமர் மோடியிடம் விளக்கினார்.
அப்போது மேற்காசிய விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதி மற்றும் தூதரக ரீதியில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, தடையற்ற வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire