Les allocations chômage உயர்த்தப்படாது: Unédic அறிவிப்பு!!
30 ஆனி 2026 செவ்வாய் 21:05 | பார்வைகள் : 2930
வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை (Allocation chômage) ஜூலை 1 முதல் உயர்த்தப்படாது என்று, இந்த உதவித்தொகையை நிர்வகிக்கும் Unédic அமைப்பு, ஜூன் 30, செவ்வாய்க்கிழமை, தனது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ளது.
உதவித்தொகையை உயர்த்துவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவான வாக்குகள் சமமாக இருந்ததால், எந்த உயர்வும் வழங்கப்படாது என்று அந்த அமைப்பு தெரிவித்தது. கடைசியாக, 2025 ஜூலை 1 அன்று, வேலையின்மை உதவித்தொகை 0.5% உயர்த்தப்பட்டிருந்தது.
மேலும், ஜூன் 1 அன்று வெளியிடப்பட்ட ஆய்வில், வேலையின்மை உதவித்தொகை பெறுபவர்களில் பலர் குறுகிய காலத்திலேயே மீண்டும் வேலை பெறுகின்றனர் என்று Unédic தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, 2022 ஆம் ஆண்டில் உதவித்தொகை பெறத் தொடங்கிய 1.7 மில்லியன் பயனாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இவர்களுக்கு அதிகபட்சமாக 24 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான உதவித்தொகை பெறும் உரிமை இருந்தது.
அறிக்கையின்படி, முதல் உதவித்தொகை கிடைப்பதற்கும் முன்பே, வேலை கிடைக்கும் வாய்ப்பு 18% முதல் 22% வரை (உரிமைக் காலத்தைப் பொறுத்து) உள்ளது. அதன் பின்னர் காலம் செல்லச் செல்ல, வேலை கிடைக்கும் சாத்தியம் படிப்படியாகக் குறைகிறது.
2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், Unédic வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2.7 மில்லியன் பேர் வேலையின்மை காப்பீட்டு உதவித்தொகையை பெற்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாதத்திற்கு 1,000 யூரோவுக்கும் குறைவான தொகையையே பெற்றனர். அந்த காலகட்டத்தில், சராசரியாக மாதந்தோறும் வழங்கப்பட்ட வேலையின்மை உதவித்தொகை 1,040 யூரோக்களாகஆக இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire