வேலையில்லாதோர் எண்ணிக்கை 2.7 மில்லியனாக உயர்வு!!
8 ஆவணி 2026 சனி 07:30 | பார்வைகள் : 1388
வேலையின்மை விகிதம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 0.2 சதவீதப் புள்ளி அதிகரித்து 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டு இலையுதிர் காலத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விகிதம் இதுவாகும் என Insee தெரிவித்துள்ளது. வேலை இல்லாமல் தீவிரமாக வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 62,000 ஆக அதிகரித்து, 2.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என தொழிலாளர் அமைச்சர் Jean-Pierre Farandou தெரிவித்துள்ளார். ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பிரெஞ்சு நிறுவனங்கள் முதலீடு மற்றும் ஆட்சேர்ப்பில் தயக்கத்துடன் இருப்பதாகக் கூறினார். மேலும், 2023 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட முழு வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் RSA பெறுவோர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தற்போது வேலை தேடுவோர் கணக்கில் இணைக்கப்படுவதும் வேலையின்மை விகிதம் உயர்வதற்கு ஒரு காரணம் என விளக்கினார்.
RSA பயனாளர்கள் மற்றும் இளைஞர் ஒப்பந்தங்களின் தாக்கத்தை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், வேலையின்மை விகிதம் 8.3 சதவீதத்துக்குப் பதிலாக 7.9 சதவீதமாக இருந்திருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். வேலைவாய்ப்பில் அதிக சிரமங்களை எதிர்கொள்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என அவர் குறிப்பிட்டார். இதனால் இளைஞர்களுக்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், 2027ஆம் ஆண்டிலும் apprenticeship மற்றும் Contrat d'engagement jeune திட்டங்களுக்கான நிதி தொடரும் என்றும் Jean-Pierre Farandou தெரிவித்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire