Paristamil Navigation Paristamil advert login

TV, Wi-Fi, OTT இணைந்த Jio Home Pack திட்டங்கள் அறிமுகம்

TV, Wi-Fi, OTT இணைந்த Jio Home Pack திட்டங்கள் அறிமுகம்

8 ஆவணி 2026 சனி 14:20 | பார்வைகள் : 544


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குடும்பங்களுக்கான புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்கள் TV, Wi-Fi மற்றும் OTT சேவைகள் அனைத்தையும் ஒரே சந்தாவில் வழங்குகின்றன.

புதிய திட்டங்கள் மாதத்திற்கு ரூ.400 முதல் தொடங்குகின்றன. மூன்று வகைகளில் கிடைக்கின்றன:

TV-only pack: 400 ரூபாய்க்கு 1,000-க்கும் மேற்பட்ட Live TV சேனல்கள் மற்றும் 12 OTT ஆப்ஸ் கிடைக்கும்.

Wi-Fi-only packs: 450 ரூபாய்க்கு - 30 Mbps வேகத்திலும், 600 ரூபாய்க்கு - 100 Mbps வேகத்திலும் இன்டர்நெட் கிடைக்கும்.

Wi-Fi + TV + OTT Packs

555 ரூபாய்க்கு - 30 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.

707 ரூபாய்க்கு - 100 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.

இந்த திட்டங்கள், வீட்டு தேவைகளுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்யும் வசதியை வழங்குகின்றன. இணையம் மட்டும் வேண்டுமென்றாலும், TV சேனல்கள் மட்டும் போதும் என்றாலும், அல்லது அனைத்தும் வேண்டும் என்றாலும் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

ஜியோ நிறுவனம், புதிய பயனர்களுக்கு இலவச doorstep installation மற்றும் maintenance support வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள், OTT பயன்பாடு அதிகரித்துள்ள காலத்தில், குடும்பங்களுக்கு சிறந்த விலை மற்றும் வசதியான இணைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

100 Mbps வரை வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட TV சேனல்கள், 12 OTT ஆப்ஸ் ஆகியவை ஒரே சந்தாவில் கிடைப்பது, இந்தியாவில் டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.