தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்!
9 ஆவணி 2026 ஞாயிறு 07:24 | பார்வைகள் : 445
தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழக மக்களவை தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால், 59 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறைநடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகம் எதிர்ப்புதொகுதி மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளில் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால், என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-1) திருத்தணி2) திருவள்ளூர்3) சென்னை வடக்கு4) சென்னை கிழக்கு5) சென்னை மத்திய6) சென்னை தெற்கு7) சென்னை மேற்கு8) தாம்பரம்9) செங்கல்பட்டு10) காஞ்சிபுரம் .11) வேலூர்12) திருப்பத்தூர்13) ராணிப்பேட்டை14) திருவண்ணாமலை15) வந்தவாசி / ஆரணி 16) திண்டிவனம்17) விழுப்புரம்18) கள்ளக்குறிச்சி 19) கடலூர்20) சிதம்பரம் .21) ஓசூர்22) கிருஷ்ணகிரி23) தர்மபுரி24) சேலம்25) மேட்டூர்26) ராசிபுரம்27) நாமக்கல்28) ஈரோடு29) கோபிசெட்டிபாளையம்30) திருப்பூர்.31) தாராபுரம் (அல்லது) பழனி 32) பொள்ளாச்சி33) கோவை கிழக்கு34) கோவை மேற்கு35) நீலகிரி36) கரூர் 37) பெரம்பலூர்38) அரியலூர் (அல்லது) லால்குடி39) திருச்சிராப்பள்ளி40) தஞ்சாவூர் .41) கும்பகோணம்42) மயிலாடுதுறை43) நாகபட்டினம்44) திருவாரூர்45) புதுக்கோட்டை46) சிவகங்கை47) ராமநாதபுரம்48) தூத்துக்குடி49) திருச்செந்தூர்50) திருநெல்வேலி .51) நாங்குநேரி (அல்லது) கன்னியாகுமரி52) கன்னியாகுமரி (அல்லது) நாகர்கோவில் 53) தென்காசி54) சிவகாசி55) விருதுநகர்56) தேனி57) மதுரை கிழக்கு58) மதுரை மேற்கு59) திண்டுக்கல்
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire