நாடாளுமன்றத்தில் 4 சட்டங்கள் அறிமுகம்
10 ஆவணி 2026 திங்கள் 07:15 | பார்வைகள் : 403
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு விவகாரம், டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்படி Tribunal சீரமைப்பு சட்டம், சுரங்கம் கனிம வளங்கள் திருத்த சட்டம், கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சி தொடர்பான தேசிய சட்டம் ஆகிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் முக்கியமான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எம்.பி.க்கள் தவறாமல் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறடா சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire