ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!
10 ஆவணி 2026 திங்கள் 12:19 | பார்வைகள் : 422
ஈரான் மீது போரட தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டு வந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைள் இடம்பெற்று வருகின்றது.
ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire