வெப்ப அலை: செவ்வாய்க்கிழமை 43 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
10 ஆவணி 2026 திங்கள் 21:13 | பார்வைகள் : 1027
செவ்வாய்க்கிழமை பிரான்சின் 43 மாவட்டங்கள் கடும் வெப்பத்திற்கான ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் இருக்கும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையமான Météo France தெரிவித்துள்ளது. இதில் பிரான்சின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளும், நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள மாவட்டங்களும் அடங்கும்.
Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Aude, Bouches-du-Rhône, Charente, Cher, Corrèze, Côtes-d’Armor, Doubs, Drôme, Finistère, Gard, Hérault, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Mayenne, Morbihan, Orne, Pyrénées-Orientales, Rhône, Saône-et-Loire, Sarthe, Savoie, Haute-Savoie, Deux-Sèvres, Var, Vaucluse, Vendée, Haute-Vienne, Corse-du-Sud, Vienne மற்றும் Haute-Corse.
செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்களில், தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை 35°C முதல் 39°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான இரவில், தெற்கு பிரிட்டானி, Maine, Touraine, Berry மற்றும் Bourgogne பகுதிகள் வரை குறைந்தபட்ச வெப்பநிலை 20°C-ஐத் தாண்டக்கூடும்.
இந்த வெப்ப அலை வாரத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை அடையக்கூடும் என Météo France கணித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire