Paristamil Navigation Paristamil advert login

நடிகை மிருணாள் தாக்கூர் கிரிக்கெட் வீரரை காதலிக்கின்றாரா?

 நடிகை மிருணாள் தாக்கூர் கிரிக்கெட் வீரரை காதலிக்கின்றாரா?

11 ஆவணி 2026 செவ்வாய் 12:34 | பார்வைகள் : 141


நடிகை மிருணாள் தாக்குரும், இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அந்த நடிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மும்பை மேற்கு பாந்த்ராவில் உள்ள ஒரு கஃபேவில் இருவரும் இருப்பது போன்ற காணொலி ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து, இருவரும் காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவுகள் பரவின.

இந்த வதக்கிகளுக்கு கடுமையாகப் பதிலளித்துள்ள மிருணாள் தாக்குர், “கொஞ்சம் நிதானமாக இருங்கள். நாங்கள் இருவரும் எங்கே ஒன்றாக இருந்தோம்? நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் தானே? அப்படியிருந்தும் இதுபோன்ற வதந்திகளை எப்படி நம்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன என்றும், அதிகமான பார்வைகளை பெற இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பாமல் உண்மையான பிரச்சினைகள் குறித்து பதிவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜென் சி தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் குறித்து பரவும் இது போன்ற வதந்திகள் பல சமயங்களில் தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது