கிராமத்து கருவாட்டு குழம்பு
11 ஆவணி 2026 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 122
கருவாடு என்றால் யாருக்குத்தான் சாப்பிட பிடிக்காது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டு வறுவல், கருவாடு தொக்கு போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். அதிலும் வீட்டில் கருவாட்டுக் குழம்பு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் மிகவும் சுவையான கருவாட்டு குழம்பை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருவாடு - 200 கிராம்
மாங்காய் - 1
வாழைக்காய் - 1
கத்தரிக்காய் - 1
முருங்கைக்காய் - 1
புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க தேவையானவை :
தேங்காய் - 1/2 கப்
வெங்காயம் - 1/4
சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை :
கருவாட்டு குழம்பு வைப்பதற்கு முன் கருவாட்டை வெதுவெதுப்பான தண்ணியில் ஊற வைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நல்லா வதக்கி கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து திரும்ப நன்றாக வதக்கி பின்பு அதில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதங்கியவுடன் வெட்டி வைத்துள்ள மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய், வாழைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தற்போது கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும். குறிப்பு : ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் குழம்பில் உப்பு சேர்ப்பதில் கவனம் தேவை.
இவை அனைத்தும் 5 நிமிடம் கொதித்ததும் நாம் அலசி வைத்துள்ள கருவாட்டை போட்டு அதையும் ஒரு 5, பத்து நிமிஷம் கொதிக்கவிடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய், வெங்காயம் மற்றும் சீராக கலவையை அதனுடன் சேர்த்து கிளறி கொள்ளவும்.
இப்போது எண்ணெய் கருவாட்டு குழம்பு மேலே பிரிந்து மிதக்கும் வரை தீயை சிறிதாக வைத்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு ரெடி...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire