Paristamil Navigation Paristamil advert login

உலகக்கிண்ணத்திற்கு நேரடித் தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்

உலகக்கிண்ணத்திற்கு நேரடித் தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்

11 ஆவணி 2026 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 137


ஆப்கானிஸ்தான் அணி 2027 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதி பெற்றது.

அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட நேரடித் தகுதிப் பெற்றது.

2027 ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் விளையாட, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும்.

அந்த வகையில், போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளைத் தவிர்த்து 7 அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 8வது அணியாக நேரடித் தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது முறையாக ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும் தகுதிச்சுற்று மூலம் அந்த அணி நுழைய வாய்ப்புள்ளது.