Paristamil Navigation Paristamil advert login

Ducati-யின் புதிய Monster V2 இந்தியாவில் அறிமுகம்

Ducati-யின் புதிய Monster V2 இந்தியாவில் அறிமுகம்

11 ஆவணி 2026 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 151


Ducati இந்தியாவில் இரண்டு புதிய மொடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் டுகாட்டி (Ducati), தனது புதிய Monster V2 மற்றும் Monster+ மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தலைமுறை பைக்கின் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

Monster V2-இன் முக்கிய சிறப்பம்சம், புதிய 890cc V-Twin என்ஜின் ஆகும். இது Multistrada V2, Panigale V2 மற்றும் Streetfighter V2 மொடல்களிலும் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த என்ஜின்.

முந்தைய 937cc என்ஜினை விட சற்று குறைவான அளவாக இருந்தாலும், 111 ஹார்ஸ் பவர் மற்றும் 91.1 Nm டார்க் வழங்குகிறது.

4,000 முதல் 9,000 rpm வரை 80 சதவீதம் டார்க் கிடைப்பதால், வேகமான மற்றும் எளிதான ஓட்ட அனுபவத்தை தருகிறது.

புதிய aluminium monocoque chassis காரணமாக பைக்கின் எடை 5 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் இன்னும் சுறுசுறுப்பாகவும், எளிதாகவும் இயக்கப்படலாம்.

815 mm உயரம் கொண்ட சீட், விருப்பமாக 795 mm அல்லது 775 mm ஆக குறைக்கப்படலாம். Showa 43 mm USD fork முன்புற சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோஷாக், தினசரி பயணத்திற்கும், ஸ்போர்ட்டி ரைடுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

Monster+ மாடலில் headlight cowl மற்றும் பாசஞ்சர் சீட் கவர் போன்ற கூடுதல் ஸ்டைலிங் அம்சங்கள் உள்ளன. மேலும் Ducati Red, Iceberg White, Sport Livery ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

இதன் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.14.45 லட்சம் வரை மாறுபடும்.

பைக்கில் 5-inch TFT டிஸ்ப்ளே, LED லைட்டிங், க்விக்‌ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ABS உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட்டட் கிரிப்ஸ், TPMS போன்ற விருப்ப உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.

பராமரிப்பு வசதியாக, வால்வ் கிளியரன்ஸ் இடைவெளி 45,000 km வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை அல்லது 15,000 km-க்கு ஒருமுறை சர்வீஸ் போதுமானது. இரண்டு ஆண்டுகள் அன்லிமிடெட் மைலேஜ் வாரண்டி வழங்கப்படுகிறது.

இந்த புதிய Monster V2, சக்தி, ஸ்டைல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, இந்திய பைக் ரசிகர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.