iPhone இல் Navigo அட்டை- பயணிகளுக்கு புதிய வசதி!!
11 ஆவணி 2026 செவ்வாய் 22:10 | பார்வைகள் : 255
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான வருடாந்திர Navigo பயண அட்டை தற்போது iPhone-லும் டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் Android தொலைபேசிகளில் ஜூலை 2026 தொடக்கத்தில் இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், iPhone பயனர்களுக்கு 2026 கல்வியாண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே தற்போது அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கத் தொடங்கியுள்ளது.
டிஜிட்டல் Navigo அட்டையை Apple நிறுவனத்தின் Cartes செயலியிலும் சேர்த்துக்கொள்ள முடியும். ஏற்கனவே வங்கி அட்டை அல்லது உறுப்பினர் அட்டைகளை அதில் வைத்திருப்பவர்கள், அதனுடன் Navigo அட்டையையும் இணைத்துக்கொள்ளலாம். டிஜிட்டல் மாற்றம் முடிந்த பின்னர், மெட்ரோ நுழைவாயில்களில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் iPhone-ஐ வைத்தாலே போதுமானது. பேருந்துகள் மற்றும் டிராம்களில் உள்ள NFC வசதி கொண்ட இயந்திரங்களிலும் இதே முறையில் பயண அட்டையைப் பயன்படுத்த முடியும். Android பயனர்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாற்றமில்லை.
எனினும், வருடாந்திர Navigo சந்தாவை நேரடியாக ஸ்மார்ட்போனிலேயே புதிதாகப் பெறும் வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இணையதளம் அல்லது விற்பனை நிலையம் மூலம் முதலில் அட்டையைப் பெற்ற பின்னரே, அதை செயலி வழியாக டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் Navigo அட்டையை ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போனிலும் ஸ்மார்ட்வாட்சிலும் பயன்படுத்த முடியாது; ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசியில் மின்கலம் தீர்ந்தாலும் NFC தொழில்நுட்பம் மூலம் குறிப்பிட்ட அளவு மின்கல இருப்பு பயன்படுத்தப்படுவதால் பயணத்தைத் தொடர முடியும். ஆனால் Imagine R சந்தாதாரர்களுக்கு இந்த வசதி உடனடியாக கிடைக்காது; அவர்களுக்கான டிஜிட்டல் மாற்றம் 2027 கல்வியாண்டு தொடக்கத்தில்தான், அதுவும் சிறந்த நிலையில், வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire