சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் சீமான்!
12 ஆவணி 2026 புதன் 16:48 | பார்வைகள் : 154
இயக்குனர் மணிவன்னணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சீமான். பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய துவங்கினார்.
இதனால் இரண்டு கட்சிகளையும் பிடிக்காத இளைஞர்கள் சீமானுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 லட்சம் வாக்குகளை வாங்கியது. ஆனால், 2026 தேர்தலில் அது பாதியாக குறைந்தது. தற்போது ஆளும் தவெக அரசை சீமான் விமர்சித்து வருகிறார். ஒருபக்கம், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே எல்.ஐ.கே படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடத்தி வரும் சேயோன் படத்தில் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். விரைவில் சீமான் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக சீமான் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire