விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையுமா?
12 ஆவணி 2026 புதன் 16:51 | பார்வைகள் : 153
கருப்பு சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற 14ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த படம் கருப்பு போல வசூலை அள்ளாது என சொல்கிறார்கள்.
கருப்பு படம் தனியாக வந்தது. ஆனால், விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாகும் 14ம் தேதி விஷாலின் மகுடம் திரைக்கு வருகிறது. அதேபோல், இன்னமும் பல தியேட்டர்களில் ஜனநாயகன், ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே, ஒடிசி போன்ற திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒருபக்கம், இந்த படத்தை வாங்கும் சில வினியோகஸ்தர்கள் வசூலில் தங்களுக்கு அதிக சதவீதம் வேண்டும் என கேட்கிறார்களாம். எனவே, சிக்கல் நீடித்து வருகிறது. இந்த குளறுபடிகளால் மிகவும் தாமதமாகவே விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங்கை துவங்கியிருக்கிறார்கள். இன்னும் பல தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் துவங்கப்படவில்லை.
குறிப்பாக இந்த படம் தமிழகத்தில் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே எல்லோருக்கும் லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள். ஆனால், இவ்வளவு சிக்கல் இருக்கும் போது விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமைய வாய்ப்பில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire