Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ ..படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ ..படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

12 ஆவணி 2026 புதன் 17:03 | பார்வைகள் : 165


விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணிதரன். விஜய் சேதுபதி நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. ‘பத்தா’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது.

அட்லீ வெளியிடுகிறார்.  இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.