தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விருப்பம்
13 ஆவணி 2026 வியாழன் 10:50 | பார்வைகள் : 278
சட்டசபையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
அரசியல்ரீதியாக, கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அந்த வேறுபாடுகளை கடந்து, தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய தி.மு.க.,விற்கு நன்றி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
தொகுதி மறுவரையறையால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட ஐந்து, ஆறு மாநிலங்களில் வெற்றி பெற்றாலே, பிரதமர் ஆகிவிட முடியும். இதனால், தென் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும்; அதை தடுக்க வேண்டும்.
தற்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்.
அதற்காக, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களும், பார்லிமென்டில் ஓட்டளிக்க வேண்டும். இந்த மசோதா கொண்டு வரப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களை போல், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்.
லோக்சபா தொகுதிகளை, 50 சதவீதம் அதிகரித்து தருவதாக கூறினாலும், தமிழகத்திற்கு பாதிப்புதான் ஏற்படும். நாம் வளர்ந்த மாநிலமாக இருக்கிறோம்; அதற்காக நாம் உழைக்கிறோம்.
ஆனால், மத்திய அரசுக்கு நாம் செலுத்தும் ஒரு ரூபாயில், 29 பைசா மட்டும்தான் நிதி பகிர்வாக கிடைக்கிறது. நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியவில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire