எத்தனால் வினியோகம் 1 ஆண்டில் 800 கோடி லிட்டரை கடந்தது
13 ஆவணி 2026 வியாழன் 13:09 | பார்வைகள் : 278
நம் நாட்டின் ஒட்டுமொத்த எத்தனால் (Ethanol) வினியோகம், 2025 - 26 ஆண்டில், 800 கோடி லிட்டரை தாண்டியுள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.டி.ஏ., எனப்படும் அனைத்து அகில இந்திய வடிகட்டுதல் நிறுவனங்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாவது:
நடப்பு எத்தனால் (Ethanol) வினியோக ஆண்டில், இதுவரை 800 கோடி லிட்டருக்கும் மேல் எத்தனால் (Ethanol) வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 93 கோடி லிட்டர் எத்தனால் (Ethanol) வினியோகிக்கப்பட்டது. ஜூலையில் தானிய அடிப்படையி லான மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, 71 கோடி லிட்டர் எத்தனால் (Ethanol) வினியோகிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் மொத்தம் வினியோகிக்கப்பட்ட 103 கோடி லிட்டர் எத்தனாலில், தானிய அடிப்படையிலான எத்தனால் (Ethanol), 75 கோடி லிட்டராக இருந்தது.
அந்த வகையில், மொத்த வினியோகத்தில் தானிய அடிப்படையிலான எத்தனாலின் பங்கு, ஜூன் மாதத்தின் 73 சதவீதத்தில் இருந்து ஜூலையில், 76 சதவீதமாக உயர்ந்துள்ளது.ஜூலை மாதத்தில் தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியில் மக்காச்சோளம் மற்றும் இந்திய உணவு கழகத்தின் உபரி தானியங்கள் தலா 30 கோடி லிட்டர் அளவுக்கு பங்களித்துள்ளன.
இவ்வாறு அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு எத்தனால் ஆண்டின் வினியோகம், 800 கோடி லிட்டர் என்ற அளவை எட்டியது, நாட்டின் எத்தனால் (Ethanol) திட்டத்தின் முக்கிய மைல்கல். தானிய அடிப்படையிலான எத்தனால் வினியோகத்தின் பங்கு, ஒரே மாதத்தில், 73 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்த, அதிக எத்தனால் கலப்பு, ப்ளெக்ஸ்-பியூயல் வாகனங்கள் மற்றும் எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு வாயிலாக இதை சாதிக்க முடியும். - பாரதி பாலாஜி, ஏ.ஐ.டி.ஏ., துணை தலைமை இயக்குநர்.
சேதமடைந்த உணவு தானியங்கள் வாயிலாக 11 கோடி லிட்டர் எத்தனால் (Ethanol) கிடைத்துள்ளது. கரும்பு மூலப்பொருட்களில் இருந்து ஜூலையில், 22 கோடி லிட்டர் எத்தனால் வினியோகிக்கப் பட்டது. இது ஜூன் மாதத்தின் 28 கோடி லிட்டரை விட குறைவு.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire