Paristamil Navigation Paristamil advert login

பதவி விலகும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்

பதவி விலகும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்

13 ஆவணி 2026 வியாழன் 14:18 | பார்வைகள் : 371


டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனின் பதவிக் காலம் 2027 பிப்., 20ல் முடிவடைய உள்ள நிலையில், பதவியில் தொடர விரும்பவில்லை என அவர் அறிவித்துள்ளார்.

இதனால், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் அவர் வகித்த 10 ஆண்டு காலம் முடிவுக்கு வருகிறது. தற்போது 63 வயதா ன சந்திரசேகரன், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.  அடுத்த தலைவரை விரைவில் தேர்வு செய்யுமாறு டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் வாரியத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ர த்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை இணைந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 51.54 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இவை இரண்டு மே,  தன் பதவி கால த்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரைத்தன. கடந்த பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, ஒரு இயக்குநர் ஆதரவு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

முடிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு  மாதங்க ளுக்கு பிறகும் இது தொடர்பாக இதுவரை முடிவு எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் நிறுவனம் மிகப்பெரியது. முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற் றப்பட வேண்டிய முக்கிய நிலைகளில் உள்ளன.

வரும் 2027 பிப்ரவரிக்கு பிறகு அவற்றுக்கு தலைமையேற்க ஒருவர் அவசிய தேவை என்ற நிலையில், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக கூட்டாளிகள், மற்ற பங்குதாரர்களுக்கு அதுகுறித்து தெளிவு கிடைக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில், 2027 பிப்., 20க்கு பிறகு பதவியில் நீடிக்க விரும்பவில்லை எ ன்ற என் முடிவை டாடா சன்ஸ் வாரியத்துக்கு தெரிவித்து விட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா 2024ல் மறைந்ததை அடுத்து,  டாடா அறக்கட்டளைகளின் தலைவராக நோயல் டாடா பொ றுப்பேற்றார். சந்திரசேகரன் மற்றும் நோயல் டாடா இடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே தற்போதைய இழுபறி க்கு காரணம் என கூறப்படுகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட் டியலிடக் கூடாது என்பதற்கு நோயல் டாடா உறுதி கேட்டதாகவும், அதற்கு சந்திரசேகரன் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் குழுவில் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரங்களிலும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் - பங்குகள் யார் வசம்?

அறக்கட்டளைகளின் பங்கு: 66%

முக்கிய பங்குதாரர்கள்:

சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் — 27.98% 
சர் ரத்தன் டாடா டிரஸ்ட் — 23.56% 
இரண்டும் சேர்த்து — 51.54%

மற்ற அறக்கட்டளைகள்:

ஜே.ஆர்.டி. டாடா டிரஸ்ட் — 4.01%

டாடா எஜுகேஷன் டிரஸ்ட் — 3.73% 
டாடா சோஷியல் வெல்பேர் டிரஸ்ட் — 3.73% 
ஆர்.டி. டாடா டிரஸ்ட் — 2.19% 
சர்வஜனிக் சேவா டிரஸ்ட் — 0.10%

பங்குகள் 6% வரை சரிவு

சந்திரசேகரனின் அறிவிப்பை அடுத்து நேற்று டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன. இதில், டி.சி.எஸ்., பங்கு கிட்டத்தட்ட 6% சரிந்தது.

டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிக்கிள்ஸ் பங்கு 4.11%, 
டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் 2.85%, 
டாடா எல்க்ஸி 2.14%, 
டாடா கம்யூனிகேஷன்ஸ் 2%, 
டாடா ஸ்டீல் 1.96%, டைட்டன் 1.66% சரிந்தன.

மேலும், பி.எஸ்.இ-.,யில் டாடா பவர் பங்கு 1.40%, 
இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி 1.32%, 
டிரென்ட் 0.89% சரிவைச் சந்தித்தன.

மொத்தத்தில் பதவி விலகல் அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்தில், இக்குழும பங்குகளின் மதிப்பு 86,000 கோடி வீழ்ச்சி கண்டன.

ரத்தன் டாடாவின் மறைவை அடுத்து, டாடா குழுமத்தின் உயர் நிர்வாகத்தில் நீடித்து வரும் அதிகார மோதலால், அவருக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இதற்கு முன்பு, ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான நிர்வாகிகளான விஜய் சிங் மற்றும் மெஹ்லி மிஸ்திரி ஆகியோரும் விலகினர். மேலும்,  இயக்குநர்களான அஜய் பிரமல் மற்றும் ரால்ப் ஸ்பெத் ஆகியோரும் தங்கள் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

கருத்து வேற்றுமைக்கு காரணம்?

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டத்துக்கு, நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில்,  பட்டியலிடும் யோசனைக்கு வேணு சீனிவாசன் உள்ளிட்ட சிலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாது என உறுதியளிக்க வேண்டும் என்ற நோ யல் டாடாவின் கோரிக்கைக்கு, சந்திரசேகரன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக தன் மகன் நெவில் டாடாவை நியமிக்க நோயல் டாடா மேற்கொண்ட முயற்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. டாடா குழுமத்தில் கருத்து வேறுபாடு விவகாரம், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தீவிரமடைந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில், நோயல் டாடா, சந்திரசேகரன், வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர் டேரியஸ் கம்பட்டா ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.