ஐரோப்பிய, அத்திலாந்திக் வான்வெளியில் தென்பட்ட முழு சூரிய கிரகணம் !
13 ஆவணி 2026 வியாழன் 13:33 | பார்வைகள் : 128
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல் பகுதிகளை உள்ளடக்கி அரிதான முழு சூரிய கிரகணம் நேற்று (12) நிகழ்ந்தது.
ஐஸ்லாந்திற்கு அருகே கிரகணம் உச்சத்தை அடைந்தபோது, அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 18 வினாடிகளுக்கு சூரியனை நிலவு முழுமையாக மறைத்து இருள் சூழ்ந்தது.
கிரகணத்தின் போது நிலவின் நிழல் சூரியனை மறைத்து 'வைர மோதிர வடிவம்' அந்திப் பொழுது போன்ற நிழல்கள் மற்றும் இருண்ட வான்வெளியை உருவாக்கியது.
ஸ்பெயினின் டுராட்டன் போன்ற கிராமப்புறப் பகுதிகள், கடற்பகுதிகள், பழமையான தேவாலயங்கள் மற்றும் சூரியகாந்திப் பூந்தோட்டங்களின் பின்னணியில் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் இக்காட்சிகளைப் படம்பிடித்து மகிழ்ந்தனர்.
கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்தமை மற்றும் விண்கல் மழை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த முழு சூரிய கிரகணமும் அமைந்ததால், இது "வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய நிகழ்வு" எனப் பார்வையாளர்களால் வர்ணிக்கப்பட்டது.
இக்கிரகணத்தின் போது புவியீர்ப்பு விசை தற்காலிகமாகச் செயலிழந்துவிடும் எனச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த போலியான வதந்திகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா திட்டவட்டமாக மறுத்து, அது முற்றிலும் ஆதாரமற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire