டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்
13 ஆவணி 2026 வியாழன் 16:25 | பார்வைகள் : 155
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியுள்ள இடது இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
வங்கதேசம் மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி, டார்வினில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம் ஆடியது.
அவுஸ்திரேலியா அணி, 53 ஓவர்களில் 198 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ஓட்டங்கள் குவித்தார். வங்கதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியா தரப்பில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவுஸ்திரேலியா அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இலங்கை வீரர் ரங்கனா ஹெரத் 433 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire