Paristamil Navigation Paristamil advert login

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; ராகுல் மேல்முறையீடு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; ராகுல் மேல்முறையீடு

14 ஆவணி 2026 வெள்ளி 12:15 | பார்வைகள் : 194


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆமதாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ராகுல் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு ஆமதாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தெளிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஆமதாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.