மாணவர் கொலை : தாய் மாமனாக விஜய் என்ன சொல்லப் போகிறார்? சீமான்
14 ஆவணி 2026 வெள்ளி 13:19 | பார்வைகள் : 198
கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
### 'குழு மோதல் எனக் கூறி மூடி மறைப்பதா?'
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக்கூறி மூடி மறைப்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, இறுதியில் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
“போதைப்பொருள் புழக்கம் என்ற உண்மையை மறைத்து, மாணவர்களுக்கு இடையேயான தகராறு என வழக்கின் கோணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். த.வெ.க., அரசின் இந்தப் போக்கு அநீதிக்கு துணைபோகும் துரோகம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
### 'விஜய் என்ன சொல்லப் போகிறார்?'
மேலும், “இறந்து போன 19 வயது பிள்ளையின் மரணத்திற்கு 'தாய் மாமனாக' விஜய் என்ன சொல்லப் போகிறார்?” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
### ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட மாணவர் அமுதனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மாணவர் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire