11 நாட்கள் பராமரிப்புக்குப் பின் மீண்டும் இயங்கும் கேபிள் C1 போக்குவரத்து சேவை!!
14 ஆவணி 2026 வெள்ளி 07:12 | பார்வைகள் : 461
Val-de-Marne பகுதியில் இயங்கும் Île-de-France-இன் முதல் நகர்ப்புற கேபிள் C1 சேவை, வருடாந்த பராமரிப்புக்காக 11 நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை சேவை நிறுத்தப்பட்டிருந்ததால், தினமும் சுமார் 12,000 முதல் 13,000 பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தக் காலப்பகுதியில் Créteil மற்றும் Villeneuve-Saint-Georges இடையே கேபிள் C1 சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகளின் சிரமத்தை குறைக்க Île-de-France Mobilités மாற்றுப் பேருந்து சேவையை ஏற்பாடு செய்திருந்தாலும், 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டதால் வழக்கமான தொடர்ச்சியான கேபிள் சேவைக்கு அது இணையாக இருக்கவில்லை.
பராமரிப்புப் பணிகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இதே காலகட்டத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு இந்த பராமரிப்பு நடைபெறும். மின்சாரக் கூறுகள், இயந்திர அமைப்புகள், மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டதுடன், தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தீயணைப்புப் படையினர் அவசரநிலை ஏற்பட்டால் பயணிகளை வெளியேற்றுவதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர். கேபிள் C1 சேவை வழக்கமான நேர அட்டவணையின்படி வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையும், வார இறுதிகளில் அதிகாலை 12.30 மணி வரையும் இயங்கும்.
2025 டிசம்பர் மாதம் 13ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட கேபிள் C1 சேவை, Créteil Pointe du Lac நிலையத்திலிருந்து Villeneuve-Saint-Georges வரை 4.5 கிலோமீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் கடக்கிறது. மொத்தம் ஐந்து நிலையங்கள் வழியாகச் செல்லும் இந்த சேவை, Pointe du Lac பகுதியில் மெட்ரோ 8 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
சேவை தொடங்கியதிலிருந்து இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கேபிள் C1 சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதிக்குள் கேபிள் C1, மொத்தம் 40,075 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாக Île-de-France Mobilités தெரிவித்துள்ளது. சேவை தொடங்கிய ஆரம்ப நாட்களில் சில சிறிய தடங்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், அதன் பின்னர் அரிதாகவே சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பலத்த காற்று காரணமாக சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire