அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு
14 ஆவணி 2026 வெள்ளி 09:04 | பார்வைகள் : 220
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ‘Truth API’ சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
Trump Media & Technology Group (TMTG) அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சேவை, ட்ரம்ப் உள்ளிட்ட Truth Social இன் செல்வாக்குமிக்க கணக்குகளில் வெளியாகும் பதிவுகளை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அதிவேக வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கு மாதாந்தம் 60,000 முதல் 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ட்ரம்பின் கொள்கை அறிவிப்புகள் அல்லது சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களுக்கு முரணானது எனவும், அரசாங்க தகவல்களை பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
இதனிடையே, Trump Media & Technology Group இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் Truth Social பதிவுகளை வேகமாகவும் நேரடியாகவும் வழங்கும் தரவு சேவையே Truth API என அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் முன்னதாக கவலைகள் எழுந்திருந்தன.
Truth API மூலம் ட்ரம்பின் சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மிக வேகமாகப் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு சமமற்ற தகவல் முன்னிலை கிடைக்கக்கூடும் எனக் கூறி அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire