மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 40 கேள்விகள்: மத்திய அரசு அறிவிப்பு
15 ஆவணி 2026 சனி 05:14 | பார்வைகள் : 207
மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகளின்போது கேட்கப்பட உள்ள 40 கேள்விகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நாட்டில் வசிக்கும் மக்களின் வயது, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைச் சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அரசின் திட்டமிடலுக்கு தேவையான துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
முதற்கட்ட கணக்கெடுப்பு பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் வசதியின் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்தக் கட்டத்தில் 33 வகையான கேள்விகளுக்கான தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் லடாக், ஜம்மு-காஷ்மீரின் பனிப்பொழிவு பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்குகின்றன. பிற மாநிலங்களில் இந்தப் பணிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளன.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்க வேண்டிய 40 கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கேட்கப்பட உள்ள கேள்விகள்:
பெயர்
குடும்பத் தலைவருடன் உள்ள உறவுமுறை
பாலினம்
பிறந்த தேதி மற்றும் வயது
திருமணமானவரா?
திருமணமானபோது வயது என்ன?
கணவர் அல்லது மனைவியின் பெயர்
எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
மதம்
எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்தவரா என்பது குறித்த விவரம்
தந்தையின் பெயர்
தாயாரின் பெயர்
மாற்றுத்திறனாளியா?
தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகளின் எண்ணிக்கை
கல்வித் தகுதி குறித்த விவரம்
கல்வி நிறுவனத்தில் வருகைப்பதிவு குறித்த விவரம்
அதிகபட்சமாக பெற்றுள்ள கல்வித் தகுதி
கடந்த ஆண்டு வேலை பார்த்தவரா?
பொருளாதார நிலை குறித்த விவரம்
தொழில்
வியாபாரம், வர்த்தகம் அல்லது பணி குறித்த விவரம்
எந்தத் துறையில் வேலை செய்கிறார் என்பது குறித்த விவரம்
வருமானம் ஈட்டுபவரா?
வேலை தேடுபவரா?
வேலை செய்யும் இடத்திற்குச் செல்வதற்கான பயணம் குறித்த விவரம்
பிறந்த இடம்
கடைசியாக வசித்த இடம்
இடம்பெயர்ந்ததற்கான காரணம்
தற்போது வசிக்கும் இடத்தில் எத்தனை நாட்களாக வசித்து வருகிறார்?
நிரந்தர வீட்டு முகவரி
தற்போது எத்தனை குழந்தைகள் உள்ளனர்? (திருமணமானவர், விதவை, விவாகரத்து பெற்றவர் அல்லது கணவரைப் பிரிந்து வாழ்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்)
பிறந்த குழந்தைகளில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர்? (திருமணமானவர், விதவை, விவாகரத்து பெற்றவர் அல்லது கணவரைப் பிரிந்து வாழ்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்)
கடந்த ஓராண்டில் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர்? (அண்மையில் திருமணமான பெண்களுக்கு மட்டும்)
கோவிட் தடுப்பூசி எந்த ஊரில் செலுத்தப்பட்டது?
எத்தனை வங்கிக் கணக்குகள் உள்ளன?
மொபைல் எண் (இருந்தால்)
ஆதார் எண் (இருந்தால்)
வாக்காளர் அடையாள அட்டை எண்
பாஸ்போர்ட் எண் (இந்தியராக இருந்தால்)
வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளதா?
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire