பிரதமர் மோடி குறித்து ராகுலின் தரம் தாழ்ந்த விமர்சனம்: அனுராக் தாகூர் கண்டனம்
15 ஆவணி 2026 சனி 07:05 | பார்வைகள் : 172
“பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய விதம் அநாகரிகமாகவும், ஆணவம் நிறைந்ததாகவும் உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது” என்று பாஜக எம்பி அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ராகுல் காந்தியின் விமர்சனம் தரம் தாழ்ந்ததாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவரை பொதுமக்கள் மூன்று முறை நிராகரித்துள்ளனர். தற்போது அவர் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய விதம் அநாகரிகமும், ஆணவமும் நிறைந்ததாக உள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த பெண் தலைவர் குறித்து ராகுல் காந்தி அநாகரிகமான முறையில் பேசுவதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். மக்களவையிலும், வீதிகளிலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்துவிட்டார்.
மக்களவையில் எந்தவொரு விவாதத்தையும் நடத்த அவர் அனுமதிக்கவில்லை. விவாதம் நடைபெற்றபோதும், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து இரண்டு வார்த்தைகள் கூட பேசவில்லை. மேலும், என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் எந்தக் கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி பயன்படுத்திய வார்த்தைகள், அவரது தரம் தாழ்ந்த மற்றும் கேவலமான கருத்துகள் ஆகியவை அவரது அவநம்பிக்கையையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்றன” என்று அனுராக் தாகூர் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire