Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்கவே முடியாது; அமித் ஷா

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்கவே முடியாது; அமித் ஷா

15 ஆவணி 2026 சனி 10:18 | பார்வைகள் : 153


போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வீரேந்தர் சிங் பசோயா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டறிந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முழு வலையமைப்பும் வேரறுக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, தலைமறைவாக இருந்த முக்கிய போதைப்பொருள் குற்றவாளியான வீரேந்தர் சிங் பசோயாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) அதிகாரிகள் வெற்றிகரமாக இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்தப் பகுதியில் பதுங்கியிருந்தாலும், இந்தியச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை நமது விசாரணை அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

இவ்வாறு அமித் ஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.