வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர்
15 ஆவணி 2026 சனி 11:22 | பார்வைகள் : 143
நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் தொடர்ந்து பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் பிரிந்தது. இதையடுத்து இரு நாடுகளிலும் இருந்த மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். இது உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, வெறுப்பு மற்றும் துன்புறுத்தல்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பிரிவினையின்போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘பிரிவினை கொடுமையின் நினைவு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று பிரிவினை கொடுமையின் நினைவு தினம். பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை இந்நாளில் நினைவுகூர்கிறேன். வரலாற்றில் பலரின் வாழ்க்கையைச் சிதைத்த ஒரு துயரமான தருணமாக அது அமைந்தது. ஏராளமான குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். எண்ணற்ற மக்கள் அளவற்ற துன்பங்களை அனுபவித்தனர். இருப்பினும், இத்தகைய துயரங்களையும் கடந்து, மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பினர். இடர்களை சாதனைகளாக மாற்றி, நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கினர்.
அவர்களின் வாழ்க்கைப் பயணம் நமக்கு வலிமையை நினைவூட்டுகிறது. நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire