Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்: உதயநிதி

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்: உதயநிதி

15 ஆவணி 2026 சனி 12:25 | பார்வைகள் : 152


இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியவர்கள், தற்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

மீனவர் பிரச்சினை மட்டுமின்றி, ஆட்சிக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு நிலைப்பாடு என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் விவகாரத்திலும் இந்த SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.”

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.