இலங்கை தொடரில் அவர் அதை செய்வார் என நம்புகிறேன் - சுப்மன் கில்
14 ஆவணி 2026 வெள்ளி 17:06 | பார்வைகள் : 165
மானவ் சுதர் இலங்கை தொடரில் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படுவார் என கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், இலங்கை டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்திலும் பங்களிப்பார் என நம்புவதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மானவ் சுதர் இடம்பிடித்துள்ளார்.
பயிற்சி ஆட்டத்தில் அவர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 41 ஓட்டங்களும் எடுத்திருந்தார்.
இந்த நிலையில், மானவ் சுதரிடம் துடுப்பாட்டம் செய்வதற்கான திறமை உள்ளதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "மானவ் சுதரிடம் துடுப்பாட்ட திறமை உள்ளது. இதற்கு சற்று அனுபவமும், நம்பிக்கையும் தேவை. களத்தில் இறங்கி விளையாடி ஓட்டங்கள் சேர்க்கும்போதுதான் அவை கிடைக்கும்.
இந்தத் தொடரில் அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன். அவரிடம் சிறந்த பந்துவீச்சுத் திறன் உள்ளது; அதே சமயம், மிகச்சிறந்த No.8 துடுப்பாட்ட வீரராக உருவெடுக்கும் திறனும் அவரிடம் இருக்கிறது" என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire