Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த வங்காளதேச இளம் வீரர்

அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த வங்காளதேச இளம் வீரர்

14 ஆவணி 2026 வெள்ளி 18:11 | பார்வைகள் : 138


அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணியின் தன்ஸித் ஹசன் சதம் விளாசினார்.

டார்வினில் நடந்து வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், வங்காளதேசத்தின் தன்ஸித் ஹசன் சாதனை சதம் விளாசினார்.

வங்காளதேச கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நேற்று தொடங்கியது.  

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, முதல் நாள் முடிவில் வங்காளதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் தமிம், தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.  

197 பந்துகளை எதிர்கொண்ட தன்ஸித் ஹசன் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்தார்.