இந்திய பயனர்களுக்கு விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ள ChatGPT
14 ஆவணி 2026 வெள்ளி 17:16 | பார்வைகள் : 203
இந்திய பயனர்களுக்கு ChatGPTயில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPTயை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வாரத்திற்கு 100 மில்லியன் பயனர்கள் செயல்பாட்டில் உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற மற்ற சமூகவலைத்தளங்களை போல ChatGPTயும் பயனர்களுக்கு விளம்பரங்களை காட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விளம்பரங்களை காட்டப்போவதாக OpenAI இந்திய பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.
ChatGPT இலவச மற்றும் மாதம் ரூ.399 மதிப்புள்ள Go திட்டங்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் தோன்றும் என்றும், பிரீமியம் Plus, Enterprise, Pro மற்றும் Business பதிப்புகளில் விளம்பரங்கள் இருக்காது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரங்கள் ChatGPT-யின் பதில்களால் பாதிக்கப்படுவதில்லை என்றும், உள்ளடக்கத்தின் தன்மையை தெரிவிக்கும் லேபிள்கள், ChatGPT பயனர்களுக்கு வழங்கும் பதில்களிலிருந்து பிரிக்கப்பட்டு தோன்றும் என்றும் உறுதியளிக்கிறது.
ChatGPTயில் சேமிக்கப்பட்டிருக்கும் முந்தைய விளம்பரத் தொடர்புகள் மற்றும் பயனர்களின் உரையாடல் சூழல் உள்ளிட்ட தகவல்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைத் தனிப்பயனாக்க முடியும் என்று OpenAI கூறியுள்ளது.
அதே நேரத்தில், பயனர்களின் உரையாடல்கள், உரையாடல் வரலாறுகள், நினைவுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களுக்கு விளம்பரதாரர்களுக்கு அணுகல் கிடைக்காது என்று அந்த நிறுவனம் கூறியது.
விளம்பரப் பார்வைகள் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை போன்ற விளம்பரத்தின் செயல்திறன் தகவல்களை மட்டுமே விளம்பரதாரர்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire