Paristamil Navigation Paristamil advert login

சிக்ஸர்மழை பொழிந்த வால்டர், கிளாசன் - சன்ரைசர்ஸை நொறுக்கிய மான்செஸ்டர்

சிக்ஸர்மழை பொழிந்த வால்டர், கிளாசன் - சன்ரைசர்ஸை நொறுக்கிய மான்செஸ்டர்

15 ஆவணி 2026 சனி 11:21 | பார்வைகள் : 128


சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.

கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.

மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் டிம் செய்பெர்ட் டக்அவுட் ஆனார். அடுத்து ஜோஸ் பட்லர் அதிரடியாக 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் பவுல் வால்டர் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. அரைசதம் அடித்த ஹெய்ன்ரிச் கிளாசன் (Heinrich Klaasen) 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.

பவுல் வால்டர் (Paul Walter) 46 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாச, மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 186 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 31 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரியான் ரிக்கெல்டன் தனியாளாக வெற்றிக்காக போராடினார்.

எனினும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் 166 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் வெற்றி பெற்றது.

இறுதிவரை களத்தில் நின்ற ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார். ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.