EasyJet ஊழியர்கள் வேலைநிறுத்தம்: விமான சேவைகள் கடும் பாதிப்பு!!
15 ஆவணி 2026 சனி 15:08 | பார்வைகள் : 186
EasyJet விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாக இந்த ரத்துகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் குறைந்தது 98 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக SNPNC-FO தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதில் சனிக்கிழமை 47 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை 51 விமானங்களும் அடங்குகின்றன. Lyon-இல் 30, Roissy Charles-de-Gaulle-இல் 23, Bordeaux-இல் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பணிநேர அட்டவணையில் அடிக்கடி மாற்றங்கள், கடைசி நேர பணிமாற்றங்கள் மற்றும் மோசமடைந்து வரும் பணிச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மூன்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளன. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் இடம்பெறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், செப்டம்பரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என EasyJet நிறுவனம் கூறியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire