இந்தோனேசியாவில் ஒரே நாளில் இரண்டாவது நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் பதிவு
15 ஆவணி 2026 சனி 16:24 | பார்வைகள் : 163
இந்தோனேசியாவில் ஒரே நாளில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் 15.08.2026 இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (US Geological Survey) தெரிவித்ததாவது, இது ஒரே நாளில் அந்த நாட்டை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம் ஆகும்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, சுமத்ரா தீவின் தலைநகரான மெடானுக்கு தென்கிழக்கே சுமார் 126 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெமடாங்சியந்தார் பகுதியில் இருந்ததாகவும், 183 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஆனால், மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 7.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இந்தோனேசியாவை உலுக்கியது. அந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தோனேசியா, “Pacific Ring of Fire” எனப்படும் நிலநடுக்கம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகம் நிகழும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
மக்கள் பாதுகாப்பிற்காக மீட்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire